/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முறையான சாக்கடை கால்வாயின்றி சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
/
முறையான சாக்கடை கால்வாயின்றி சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
முறையான சாக்கடை கால்வாயின்றி சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
முறையான சாக்கடை கால்வாயின்றி சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ADDED : அக் 31, 2025 12:39 AM
போச்சம்பள்ளி,  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, சந்துாரிலிருந்து தொகரப்பள்ளி வழியாக, கிருஷ்ணகிரி செல்லும் சாலை உள்ளது. இதில், தொகரப்பள்ளி, அம்பேத்கர் காலனி பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள வீடுகளிலிருந்து கழிவுநீர் வெளியேற, கடந்த ஓராண்டிற்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாய் முழுமையாக அமைக்கப்படாததால், கால்வாய் வழியாக குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர், சந்துார், தொகரப்பள்ளி வழியாக, கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் தேங்குகிறது. மேலும், சாலையில் வழிந்தோடி மறுபுறம் செல்கிறது.
இதனால் அப்பகுதி சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதோடு, அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி  மக்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிடம் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றம் சாட்டுகின்றனர். எனவே, கழிவுநீர் வழிந்தோட முழுமையான கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

