/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சர்வீஸ் சாலையில் கழிவுநீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
சர்வீஸ் சாலையில் கழிவுநீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
சர்வீஸ் சாலையில் கழிவுநீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
சர்வீஸ் சாலையில் கழிவுநீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஏப் 20, 2025 01:25 AM
ஓசூர்:ஓசூரில், தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் ஓடும் கழிவு நீரால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரி
கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சீத்தாராம்மேடு பகுதியில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பால், கழிவுநீர் வெளியேறி, மாருதி நகர் வரை அரை கி.மீ., துாரத்திற்கு சர்வீஸ் சாலையில் ஓடுகிறது.
இப்பகுதியில், வருமான வரித்துறை அலுவலகம், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மேலும், நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் செல்லும்போது, பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது, கழிவுநீர் தெறிக்கிறது. இதை அறிந்திருந்தும், தேசிய நெடுஞ்சாலைத்துறை, அடைப்பை சரிசெய்து, கழிவுநீர் சர்வீஸ் சாலைக்கு வராமல் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. சுகாதார சீர்கேட்டால், வாகன ஓட்டிகள் அவதியடைவதால், கால்வாய் அடைப்பை சரிசெய்து, சர்வீஸ் சாலைக்கு கழிவு நீர் வராமல் உடனடியாக தடுக்க, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.