/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.4 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய்
/
ரூ.4 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய்
ADDED : மார் 16, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த குட்டூர் பஞ்., கொல்லசேக்கினாம்பட்டியில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி அ.தி.மு.க., மேற்கு மாவட்ட அவை தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான பெருமாள் பணிகளை துவக்கி வைத்தார்.
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வள்ளி, பஞ்., வார்டு உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

