/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாகலுார் சார்பதிவாளர் அலுவலகம் முற்றுகை
/
பாகலுார் சார்பதிவாளர் அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூலை 12, 2025 01:03 AM
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நல்லுார் பஞ்.,க்கு உட்பட்ட சித்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு சொந்தமான, 8 ஏக்கர் நிலம் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அந்த நிலத்தின் ஒரு பகுதியை, வாரிசுதாரர்களுக்கு தெரியாமல் சிலர் மோசடியாக போலி பத்திரம் தயார் செய்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
அதனால் நேற்று, பாகலுார் சார்பதிவாளர் அலுவலகம் சென்ற குடும்பத்தினர், சார்பதிவாளர் (பொறுப்பு) சசிகலாவை முற்றுகையிட்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை உண்மையான ஆவணம் இல்லாமல் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாகலுார் போலீசார் மற்றும் சார்பதிவாளர் சசிகலா பேச்சுவார்த்தை நடத்தி, உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.