/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் இன்று பாடகி சித்ராவின் இன்னிசை நிகழ்ச்சி
/
ஓசூரில் இன்று பாடகி சித்ராவின் இன்னிசை நிகழ்ச்சி
ADDED : பிப் 17, 2024 12:47 PM
ஓசூர்: ஓசூரில், முதன்முறையாக பத்மபூஷன் சின்னக்குயில் சித்ராவின், மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி ஓசூர் சென்னை சில்க்ஸ் அருகில் அமைந்துள்ள, அலுபி க்யூப் மைதானத்தில் இன்று மாலை 6:30 மணியளவில் நடைபெற உள்ளது.
சென்னையை சேர்ந்த புகழ்பெற்ற மௌன ராகம் முரளி இசைக்கு குழுவினர் இந்நிகழ்ச்சியை நடத்துகின்றனர். முதன் முறையாக ஓசூர் மக்களுக்கு சித்ரா இசை விருந்து அளிக்க வருகிறார். அவர்களுடன் இணைந்து பிரபல பின்னணி பாடகர் சத்திய பிரகாஷ் மற்றும் பலர் பாட உள்ளனர். ஒரு மிகப்பெரிய பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக இது நடத்த இருக்கிறது.
நிகழ்ச்சியை மௌனராகம் காமராஜர் ஒருங்கிணைத்துள்ளார், நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அரங்கில் கிடைக்கும் மற்றும் விபரங்களுக்கு காமராஜை 9941193743 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.