/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காட்டுப்பன்றிகள், யானைகளை கட்டுப்படுத்த சோலார் மின்வேலி வேண்டும் வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவாதம்
/
காட்டுப்பன்றிகள், யானைகளை கட்டுப்படுத்த சோலார் மின்வேலி வேண்டும் வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவாதம்
காட்டுப்பன்றிகள், யானைகளை கட்டுப்படுத்த சோலார் மின்வேலி வேண்டும் வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவாதம்
காட்டுப்பன்றிகள், யானைகளை கட்டுப்படுத்த சோலார் மின்வேலி வேண்டும் வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவாதம்
ADDED : செப் 27, 2025 01:10 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது.
இதில் விவசாயிகள், அதிகாரிகளுக்கிடையே நடந்த விவாதம்:முனிராஜிலு, தேன்கனிக்கோட்டை: தேன்
கனிக்கோட்டை வனச்சரகத்தில் காட்டுப்பன்றிகள் மற்றும் ஊருக்குள் புகும் யானைகளை கட்டுப்படுத்த சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்.
கலெக்டர் தினேஷ்குமார்: விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு 36.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மகாராஜகடை பகுதியில் யானைகளை தடுக்க மின்வேலி அமைக்கப்பட்டு வருகிறது. நீங்கள் கூறும் பகுதியில் பன்னார்கட்டாவிலிருந்து வரும் யானைகளை தடுக்க மின்வேலி அமைக்கப்படும்.
முருகன், ஆவத்துவாடி: கூட்டுறவு சொசைட்டிகளில், 2 லட்சம் ரூபாய் கடன் கிடைக்கும் என அறிவிப்பு மட்டும் வந்துள்ளது. ஆனால் யாருக்கும், எந்த சொசைட்டியிலும் கடன் கொடுக்கவில்லை
கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் நடராஜன் : இது குறித்து விசாரிக்கப்படும்.
கணேஷ்ரெட்டி, பீமசந்திரம்: போலி விதைகள் அதிகளவில் உலா வருகிறது. இது குறித்து தகவல் அளித்தவுடன் வேளாண் அதிகாரிகள் சில கடைகளுக்கு சீல் வைத்தனர். இருப்பினும் வேளாண் அதிகாரிகள் அனுமதியோடு விதைகள் விற்பனை செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
கலெக்டர் தினேஷ்குமார்: நானும் செய்திதாளில் பார்த்தேன். மிகப்பெரிய சைசில் முட்டைகோஸ் வளர்ந்துள்ளது என்று. வேளாண் துறை சார்பில் செயல்படும் விற்பனை சங்க அலுவலர்கள் இது குறித்து விரிவாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
கணேஷ்ரெட்டி, பீமசந்திரம்: சாமந்தி பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் இரவில் எல்.இ.டி., விளக்கு வைத்து பூக்க வைக்கின்றனர். இதில் நல்ல மகசூல் கிடைக்கிறது. ஆனால் மின்வாரியம் யூனிட்டிற்கு, 10.50 ரூபாய் வசூலிக்கிறது.
கலெக்டர்: மின்வாரிய அதிகாரிகள் மூலம் டேரிப்பை மாற்றி அடுத்த முறையிலிருந்தே குறைக்க வழிவகை செய்யப்படும்.
ஜே.பி.,கிருஷ்ணன், சப்பானிப்பட்டி: பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தி, 38 ஆண்டுகளாகிறது. பணிகள் துவங்கவில்லை. எங்களுக்கு நிலத்திற்கான தொகையும் வழங்கவில்லை. இதுகுறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், அலுவலர்கள், 3 ஆண்டுகள் கழித்து பதில் அளிக்கின்றனர்.
கலெக்டர் தினேஷ்குமார்: நிலத்தை அரசு, திட்டப்பணிகளுக்காக எடுத்துள்ளது. பணிகள் துவங்கப்படவில்லை. இது குறித்து கருத்துரு அனுப்பி நிலத்திற்கான தொகை பெற்று கொடுப்போம். இல்லையெனில் நிலத்தை உங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்போம். மூன்று மாதம் பொறுங்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், வேளாண் இணை இயக்குனர் காளிமுத்து, தோட்டகலை இணை இயக்குனர் இந்திரா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.