/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கடைக்காரரை தாக்கிய மருமகன் கொலை முயற்சி வழக்கில் கைது
/
கடைக்காரரை தாக்கிய மருமகன் கொலை முயற்சி வழக்கில் கைது
கடைக்காரரை தாக்கிய மருமகன் கொலை முயற்சி வழக்கில் கைது
கடைக்காரரை தாக்கிய மருமகன் கொலை முயற்சி வழக்கில் கைது
ADDED : அக் 16, 2024 01:01 AM
கிருஷ்ணகிரி, அக். 16-
கிருஷ்ணகிரி, லண்டன்பேட்டையை சேர்ந்தவர் ஜாய், 46. இவர் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் சிக்கன் ரைஸ் கடை நடத்தி வருகிறார். சென்னை அம்பத்துாரை சேர்ந்தவர் அப்பு, 24. இவர், கிருஷ்ணகிரி பையனப்பள்ளி திருமலை நகரில் தங்கி, கூலிவேலை செய்து வருகிறார்.
ஜாயின் மகளை காதலித்து கடந்த, 9 மாதங்களுக்கு முன் அப்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த, 12ல் ஜாயின் வீட்டிற்கு சென்ற அப்பு, அவருடனும், அவரது மனைவியுடனும் தகராறு செய்தார். தொடர்ந்து, 13 இரவு மாமனார் ஜாயின் சிக்கன் ரைஸ் கடைக்கு சென்று, அவரிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுக்கவே,
தகராறு ஏற்பட்டது. அப்போது அப்பு, தான் வைத்திருந்த அரிவாளால் ஜாயை வெட்டி கொல்ல முயன்றார். இதில்,
படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து ஜாய் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அப்புவை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே சென்னை அம்பத்துார் எஸ்டேட் போலீஸ் சரகத்தில் ஒரு கொலை வழக்கும், மற்றொரு வழக்கும் நிலுவையில் உள்ளது.