/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கார்த்திகை மாத பிறப்பு கோவிலில் சிறப்பு பூஜை
/
கார்த்திகை மாத பிறப்பு கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : நவ 18, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத பிறப்பையொட்டி, நேற்று காலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தன.
நேற்று திங்கட்கிழமை என்பதால், வழக்கத்தை விட சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், தொழிலதிபர் வரதராஜன் ஆகியோர், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

