/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை
/
விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை
ADDED : டிச 09, 2024 07:40 AM
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த மல்லப்பாடி அருகே உள்ள நாடார்கொட்டாயை சேர்ந்தவர் குமார்த்தி, 55. இவரது மகன் திருப்பதி. நேற்று முன்தினம் திருப்பத்துாரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கார் மோதியதில், இருவரும் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடமான நாடார்கொட்டாயில், அதிவேகமாக வரும் வாகனங்கள், கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடப்பதால், அங்கு வேகத்தடை அமைக்க அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களிடம், மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் ஆகியோர் வேகத்தடை அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தனர். இதையடுத்து, வேகத்தடை அமைக்க, நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர். விபத்து நிகழ்ந்த இடத்தில், புதிதாக வேகத்தடை அமைத்து, வர்ணம் பூசப்பட்டுள்ளதால், போலீசாருக்கும், நெடுஞ்சாலைத்துறையினருக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.