/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாலக்கோடு, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

ADDED : மே 15, 2024 08:07 AM
தர்மபுரி :தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவி நித்யா, 500க்கு, 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதலிடமும், மாவட்ட அளவில் சிறப்பிடமும் பெற்றுள்ளார். இதேபோல் மாணவர்கள் ஸ்ரீகாந்த், தங்கராஜ், மாணவி பிரியதர்ஷிணி ஆகியோர், 492 மதிப்பெண் பெற்று பள்ளியில், 2ம் இடமும், மாணவியர் ரித்திகா, ராம்ஸ்ரீ, அனுசுயா ஆகியோர், 491 மதிப்பெண் பெற்று, 3ம் இடமும் பெற்றுள்ளனர்.
தேர்வில், 490 மதிப்பெண்களுக்கு மேல், 7 பேர், 480க்கு மேல், 18 பேர், 470க்கு மேல், 32 பேர், 460க்கு மேல், 55 பேர், 450க்கு மேல், 66 பேர் பெற்றுள்ளனர்.
பொதுத்தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த அனைத்து மாணவ, மாணவியரையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், பள்ளி தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜூ மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.