ADDED : ஜூன் 05, 2025 01:06 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடியில், கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இதன் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் மாலை, திருக்கொடி பவனியுடன் தொடங்கியது. இது பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் துவங்கி, பாரஸ்ட் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை அடைந்தது. தொடர்ந்து, சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் இராயப்பன் தலைமையில் கொடியேற்றமும், பின்னர் ஆடம்பர கூட்டு பாடல் திருப்பலியும் நடந்தது. பின் நற்கருணை ஆராதனை, துறவற நித்ய வார்த்தைபாடு நன்றி திருப்பலியை, லாவண்யா நோயல் மற்றும் அருட்சகோதரிகள் வழிநடத்தினர். தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விழாவில் வரும், 13ல் இரவு, தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், மின் அலங்கார தேர்பவனி நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை, பங்குதந்தை ஆரோக்ய ஜேம்ஸ், பொம்மிடி பங்கு பேரவை தலைவர் ரமேஷ், கிராம பங்கு மக்கள் செய்து
வருகின்றனர்.