/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
ADDED : ஜூலை 16, 2025 01:35 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நேற்று, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் தினேஷ்குமார், மதியழகன்,
எம்.எல்.ஏ., ஆகியோர்
பார்வையிட்டனர்.
* ஓசூர் மாநகராட்சி ஜூஜூவாடி நடுநிலைப்பள்ளியில், 1, 2, 3 ஆகிய வார்டுகளுக்கும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய, ஓசூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில், 12, 13, 14 ஆகிய வார்டுகளுக்கும், நல்லுார் பஞ்.,
மக்களுக்கு, நல்லுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் முதற்கட்டமாக நேற்று துவங்கியது.
ஓசூர், தி.மு.க., -
எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா முகாம்களை துவக்கி வைத்து, கலைஞர் மகளிர் உரிமை
தொகை பெற தகுதியான விடுபட்ட பெண்களுக்கு, விண்ணப்பங்களை
வழங்கினர்.
மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மண்டல தலைவர் ரவி
உட்பட பலர் பங்கேற்றனர். ஓசூர் மாநகராட்சி பகுதிக்குள் இன்றும் முகாம் தொடர்ந்து நடக்கிறது.