/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை'
/
'உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை'
ADDED : நவ 15, 2025 02:06 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொ) காளி-முத்து வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைத்து தொடக்க வேளாண் கூட்-டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில், யூரியா, 2,850 மெட்ரிக் டன், டி.ஏ.பி., 2,343 மெ.டன், காம்ப்ளக்ஸ், 7,812 மெ.டன், பொட்டாஷ், 806 மெ.டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட், 425 மெ.டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தனியார் உரக்கடைகளில் உர மூட்டையில் குறிப்பிட்டுள்ள விற்-பனை விலையை விட கூடுதல் விலைக்கு உரங்கள் விற்க கூடாது. விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே உரங்கள் விற்பனை செய்ய வேண்டும். உரங்கள் இருப்பு குறித்து தினசரி பலகையில் குறிப்பிட வேண்டும். யூரியா உரங்கள் வாங்கும் போது இணை உரங்களை கட்டாயப்படுத்தி விற்க கூடாது. உர விற்பனையா-ளர்கள், விற்பனை ரசீது கொடுக்க வேண்டும். உரங்கள் அதிக விலைக்கு விற்றாலோ அல்லது கடத்துதல் மற்றும் முறையற்ற தன்மையில் பட்டியலிடுதல் போன்ற விதி மீறல்கள் கண்டறியப்-பட்டால், உடனடியாக அந்த விற்பனை நிலையத்தின் உரிமம் தற்-காலிக இடைநீக்கம் செய்யப்படும். கடத்தல், பதுக்கல் கண்டறி-யப்படும் தனியார் உர விற்பனை நிலையங்களின் மீது உரக்கட்-டுப்பாடு சட்டம், 1985ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

