/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒரே பைக்கில் மூவர் பயணம் பஸ் மோதியதில் மாணவர் பலி
/
ஒரே பைக்கில் மூவர் பயணம் பஸ் மோதியதில் மாணவர் பலி
ADDED : பிப் 12, 2025 02:14 AM
கிருஷ்ணகிரி:ஒரே பைக்கில் பயணித்த மூன்று கல்லுாரி மாணவர்கள் மீது, அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலியானார்.
கிருஷ்ணகிரி அருகே தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படிக்கும், கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரைச் சேர்ந்த சீனு, 22, மேல் சோமார்பேட்டை அஸ்வின், 20, தேர்நிலைதெரு தேவராஜ், 20, ஆகிய மூவரும் நேற்று முன்தினம், 'பஜாஜ் பிளாட்டினா' பைக்கில் சென்றுள்ளனர்.
பைக்கை தேவராஜ் ஓட்டினார். மாலை, 6:00 மணியளவில், கிருஷ்ணகிரி, ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம் அருகே சேலம் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலை குறுக்கே மாடு நின்றுள்ளது. இதனால் தேவராஜ், பிரேக் பிடித்து பைக் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது, இவர்கள் பின்னால் வந்து கொண்டிருந்த சேலத்திலிருந்து, ஓசூர் நோக்கிச் சென்ற அரசு பஸ், கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியதில், மாணவர்கள் மூவரும் துாக்கி வீசப்பட்டனர்.
சீனு சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த அஸ்வின், தேவராஜ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.