/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் பி.எம்.சி., டெக் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக நாள் விழா
/
ஓசூர் பி.எம்.சி., டெக் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக நாள் விழா
ஓசூர் பி.எம்.சி., டெக் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக நாள் விழா
ஓசூர் பி.எம்.சி., டெக் கல்லுாரியில் மாணவர்கள் அறிமுக நாள் விழா
ADDED : ஜூலை 21, 2025 03:58 AM
ஓசூர்: ஓசூர் அருகே கோனேரிப்பள்ளியில் இயங்கும், இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலா-மாண்டு மாணவர்களுக்கான அறிமுக நாள் விழா நடந்தது.
பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்கள் செயலாளர் மலர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். அறங்காவலர் சசிரேகா, இயக்-குனர் சுதாகரன், பாலிடெக்னிக் முதல்வர் பாலசுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினர். பி.எம்.சி., டெக் கல்வி குழும தலைவர் குமார் தலைமை வகித்து பேசுகையில், ''அதிக வேலைவாய்ப்பு பெற்று தரும் படிப்பாக டிப்ளமோ படிப்புகள் உள்ளன,'' என்றார்.
ஓசூர், டைட்டான் ஜூவல்லரி நிறுவன மேலாளர் நரசிம்மன் பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் தனித்திறமையை வளர்த்து கொண்டு, இன்றைய தொழில்நுட்ப அறிவை சிறந்த முறையில் பெற, டிப்ளமோ படிப்புகள் பெரிதும் துணை புரியும்,'' என்றார்.
கேர் அமைப்பின் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி, மாணவர்கள் தோல்வி கண்டு துவளாமல், தியானம், யோகா போன்ற பயிற்சி-களை மேற்கொண்டு, மன உறுதியுடன் இருக்க கேட்டுக்-கொண்டார். ஏற்பாடுகளை, கல்லுாரி மக்கள் தொடர்பு அலுவலர்
விஜயகுமார் மற்றும் மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் யஸ்வந்த் செய்திருந்தனர்.