/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநில கலைத்திருவிழாவுக்கு தகுதி மாணவ, மாணவியருக்கு பாராட்டு
/
மாநில கலைத்திருவிழாவுக்கு தகுதி மாணவ, மாணவியருக்கு பாராட்டு
மாநில கலைத்திருவிழாவுக்கு தகுதி மாணவ, மாணவியருக்கு பாராட்டு
மாநில கலைத்திருவிழாவுக்கு தகுதி மாணவ, மாணவியருக்கு பாராட்டு
ADDED : நவ 20, 2024 01:46 AM
மாநில கலைத்திருவிழாவுக்கு தகுதி
மாணவ, மாணவியருக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி, நவ. 20-
கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 13ல், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நடந்தது. இதில், 10 ஒன்றியங்களில் முதலிடம் பிடித்த, 1,145 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதன் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், வேப்பனஹள்ளி ஒன்றியம் நெடுமருதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். 4 மற்றும், 5ம் வகுப்பு படிக்கும் குந்தவை குழுவை சேர்ந்த மாணவியர் கவிநிலா, வர்ஷினி, குணவதி, ஓவியா ஸ்ரீ, மாணவர்கள் பிரதாப், ஜெகதீஷ், மவுனீஷ், துர்சாந்த் ஆகியோர் நடனமாடி அசத்தினர். இக்குழு மாநில அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு நேற்று பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. மாவட்ட திட்ட அலுவலர் வடிவேல், பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி, பகுதிநேர ஆசிரியர் அம்சவள்ளி, வட்டார கல்வி அலுவலர்கள் பழனிசாமி, மரியரோஸ், சாந்தி, மேற்பார்வையாளர் கஸ்துாரி, ஆசிரியர் பயிற்றுனர்கள் மகேஷ், சிவகுமார், குமரன், நடன ஆசிரியர்கள் அகிலா, வினோத்குமார் ஆகியோர், மாணவ, மாணவியரை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.