/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குழந்தை மூக்கில் சிக்கிய கல்அறுவை சிகிச்சையில் அகற்றம்
/
குழந்தை மூக்கில் சிக்கிய கல்அறுவை சிகிச்சையில் அகற்றம்
குழந்தை மூக்கில் சிக்கிய கல்அறுவை சிகிச்சையில் அகற்றம்
குழந்தை மூக்கில் சிக்கிய கல்அறுவை சிகிச்சையில் அகற்றம்
ADDED : மே 02, 2025 01:16 AM
ஓசூர்கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி டி.ஜி.நகரை சேர்ந்த தம்பதிக்கு, மூன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, மூக்கிற்குள் சிறிய கல்லை விளையாட்டாக வைத்தது. அது வெளியே வராமல் சிக்கி கொண்டதால், வலியால் துடித்த குழந்தையை, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு, மயக்கவியல் டாக்டர் இல்லை என்றும், காலையில் வேறு ஏதாவது அறுவை சிகிச்சை இருந்தால், சேர்த்து செய்து விடுவதாகவும் கூறி, இரவு
முழுவதும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவில்லை.
அதன் பின் நேற்று காலை, 7:30 மணிக்கு மேல், அறுவை சிகிச்சை செய்து, மூக்கில் இருந்த கல் அகற்றப்பட்டுள்ளது. குழந்தை வலியால் துடித்த போதும், மருத்துவக் குழுவினர் அலட்சியமாக இருந்துள்ளனர்.
ஓசூர் அரசு மருத்துவமனையில், இப்படி அடிக்கடி பிரச்னைகள் வருகிறது. அதனால், மருத்துவத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.