/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நிலத்தை அளக்க ரூ.9000 லஞ்சம்: சர்வேயர், தரகர் கைது
/
நிலத்தை அளக்க ரூ.9000 லஞ்சம்: சர்வேயர், தரகர் கைது
நிலத்தை அளக்க ரூ.9000 லஞ்சம்: சர்வேயர், தரகர் கைது
நிலத்தை அளக்க ரூ.9000 லஞ்சம்: சர்வேயர், தரகர் கைது
ADDED : ஜன 24, 2025 02:11 AM
கிருஷ்ணகிரி:நிலத்தை அளக்க, 9,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, பர்கூர் சர்வேயர் மற்றும் இடைத்தரகரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் நாகராஜன், 55. இவர், பர்கூர் அடுத்த வெங்கடாபுரத்தில், தன் மகன் ஹரிகரன் பெயரில், 7 சென்ட் நிலம் வாங்கினார். அதை அளந்து, தனி பட்டா செய்து தரக்கோரி ஆன்லைனில் பதிவு செய்தார். தனிப்பட்டா மாற்றத்திற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், பர்கூர் தாலுகா அலுவலகத்தில் பணியிலிருந்த சர்வேயர் திருப்பத்துாரை சேர்ந்த குமரன், 45, என்பவரை சந்தித்து நிலத்தை அளந்து, தனிப்பட்டா செய்து தர கேட்டார்.
அப்போது அவரும், இடைத்தரகரான கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த சுஹேல், 30, என்பவரும், இடத்தை அளந்து தர, 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். அத்தொகையை கொடுக்க விரும்பாத நாகராஜன், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அவர்கள் ஆலோசனை படி, ரசாயனம் தடவிய, 9,000 ரூபாயை, பர்கூர் தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த சுஹேலிடம், நாகராஜ் கொடுத்தார். அவர், அத்தொகையை சர்வேயர் குமரனிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பிரபு, எஸ்.ஐ., விஜயகுமார் மற்றும் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

