/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பி.எம்.சி., டெக் கல்லுாரியில் தமிழ் பேரவை துவக்க விழா
/
பி.எம்.சி., டெக் கல்லுாரியில் தமிழ் பேரவை துவக்க விழா
பி.எம்.சி., டெக் கல்லுாரியில் தமிழ் பேரவை துவக்க விழா
பி.எம்.சி., டெக் கல்லுாரியில் தமிழ் பேரவை துவக்க விழா
ADDED : டிச 15, 2025 07:34 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை இன்ஜினியரிங் கல்லுா-ரியில், 22ம் ஆண்டு தமிழ் பேரவை துவக்க விழா நடந்தது. பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்களின் தலைவர் குமார் தலைமை வகித்தார்.
செயலாளர் மலர் முன்னிலை வகித்தார். இயக்-குனர் சுதாகரன், இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், அகப்பொறி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் திராவிட பிரேமா அறிமுக உரையாற்றினார். உதவி பேராசிரியர் அன்பு, தமிழ் பேரவை துணைத்தலைவர் முருகவேல் வரவேற்றனர்.
தமிழறிஞர் சீனிசம்பத், இசைத்தமிழின் இனிமை என்ற தலைப்பில் பேசினார். அப்போது, பனை ஓலைகளில் தவழ்ந்த தமிழ், இன்று கணிப்பொ-றிக்குள் நுழைந்து, செயற்கை நுண்ணறிவிற்குள் படர்ந்து, கால மாற்றத்திற்கு ஏற்ப தன்னை தகவ-மைத்து கொள்கிற தனித்திறம் வாய்ந்த மொழி-யாக விளங்குகிறது. தாய் மொழியை மறவாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, கடமை மாணவர்களுக்கு மிக அதிகம் இருக்கிறது
என்றார். உதவி பேராசி-ரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார். மாணவியர் சவுமியா, திலகவதி தொகுத்து வழங்கினர்.

