/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குத்தகை விவசாயிகள் பாதுகாப்புசங்கத்தினர் தர்ணா போராட்டம்
/
குத்தகை விவசாயிகள் பாதுகாப்புசங்கத்தினர் தர்ணா போராட்டம்
குத்தகை விவசாயிகள் பாதுகாப்புசங்கத்தினர் தர்ணா போராட்டம்
குத்தகை விவசாயிகள் பாதுகாப்புசங்கத்தினர் தர்ணா போராட்டம்
ADDED : ஏப் 18, 2025 01:23 AM
ஓசூர்:கோயில், மடம், அறக்கட்டளை, வக்ப் போர்டு, இனாம் நிலங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்பவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், நேற்று மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடந்தது.ஓசூர், திருப்பூர் அரிசிக்கடை வீதியில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில், பல ஆண்டுகளாக கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். நிபந்தனைகளின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சங்க மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மாநில துணைச் செயலாளர் பெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் வேலுச்சாமி, அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.