/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி 7ம் அணி சிறப்பு போலீஸ் வளாகத்தில் புகுந்த மழைநீரால் அவதி
/
போச்சம்பள்ளி 7ம் அணி சிறப்பு போலீஸ் வளாகத்தில் புகுந்த மழைநீரால் அவதி
போச்சம்பள்ளி 7ம் அணி சிறப்பு போலீஸ் வளாகத்தில் புகுந்த மழைநீரால் அவதி
போச்சம்பள்ளி 7ம் அணி சிறப்பு போலீஸ் வளாகத்தில் புகுந்த மழைநீரால் அவதி
ADDED : டிச 23, 2024 09:44 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து திருப்பத்துார் செல்லும் சாலையில், தமிழ்நாடு அரசு, 7ம் அணி சிறப்பு காவல்படை செயல்படுகிறது. இங்கு, தமிழகத்தின் பல பகுதியிலிருந்து, போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும். அதேபோல் பயிற்சி முடித்த போலீசார், இங்கு தங்க, 7ம் அணி சிறப்பு காவல்படை அலுவலக அலுவலர்களுக்கான குடியிருப்புகள், இந்த வளாகத்தில் கட்டப்பட்டுள்ளன. போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில், பெஞ்சல் புயல் மற்றும் நேற்று முன்தினம் பெய்த மழையால், இந்த வளாகத்திற்குள் அதிகளவு மழைநீர் புகுந்தது.
குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் ஆயுத பணிமனை, அலுவலக கட்டடங்களின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல் போலீஸ் பயிற்சி, அலுவலர் பணி உள்ளிட்ட எவ்வித பணியும் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.மழைநீர் புக காரணம், 7ம் அணி சிறப்பு காவல்படையை ஒட்டி, மலையாண்டஹள்ளி ஏரிக்கு செல்லும் கால்வாய் துார்வாரப்படாமல் இருப்பதே காரணம் என கூறுகின்றனர். மலையாண்டஹள்ளி ஏரிக்கு செல்லும் தண்ணீர், 7ம் அணி சிறப்பு காவல்படை வளாகத்திற்குள் புகுந்து, பெனுகொண்டாபுரம் ஏரிக்கு செல்கிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் புகாத வண்ணம், மலையாண்டஹள்ளி ஏரி கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க, 7ம் அணி சிறப்பு காவல்படை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

