/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இண்டியா கூட்டணியின் வெற்றியில்தான் நாட்டின் வளர்ச்சி: மதியழகன் எம்.எல்.ஏ.,
/
இண்டியா கூட்டணியின் வெற்றியில்தான் நாட்டின் வளர்ச்சி: மதியழகன் எம்.எல்.ஏ.,
இண்டியா கூட்டணியின் வெற்றியில்தான் நாட்டின் வளர்ச்சி: மதியழகன் எம்.எல்.ஏ.,
இண்டியா கூட்டணியின் வெற்றியில்தான் நாட்டின் வளர்ச்சி: மதியழகன் எம்.எல்.ஏ.,
ADDED : ஏப் 06, 2024 01:54 AM
கிருஷ்ணகிரி:இண்டியா
கூட்டணியின் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, காங்., வேட்பாளர்
கோபிநாத்தை ஆதரித்து, கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர்
மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்
பர்கூர் சட்டசபை
தொகுதிக்குட்பட்ட வரட்டனப்பள்ளி, தின்னுார் கூட் ரோடு,
பசவண்ணகோவில், குருவிநாயனப்பள்ளி, காரகுப்பம், பர்கூர் பேரூர் பஸ்
நிலையம், நேரலக்கோட்டை, ஒப்பதவாடி உள்ளிட்ட பஞ்.,களில் மதியழகன்
எம்.எல்.ஏ., பேசியதாவது:
மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்திற்கு
கொடுக்க வேண்டிய நிதிகளை முறையாக கொடுக்கவில்லை. ஆனால், அதைப்பற்றி
கவலைப்படாமல் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை பொருளாதாரத்தில்
முன்னேற்றி வருகிறார். மாதந்தோறும் பெண்களுக்கு, 1,000 ரூபாய்
உரிமைத்தொகை வழங்குகிறார். இண்டியா கூட்டணியின் வெற்றியில் தான்
நாட்டின் வளர்ச்சி உள்ளது. எனவே, காங்., வேட்பாளர் கோபிநாத்தை
லட்சக்கணக்கான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க
வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் தொகுதி பொறுப்பாளர்
இளங்கோவன், பர்கூர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மற்றும்
காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக கிருஷ்ணகிரி
கிழக்கு மாவட்டத்தில், 'களத்தில் இளைஞரணி' நிகழ்ச்சியை துவக்கி வைத்து
பேசினார். இதில், மாநில தி.மு.க., இளைஞரணி துணை செயலாளர்
பார்த்தகோட்டா சீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன்,
துணை அமைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

