/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் 3 பேரின் ஜாமினை ரத்து செய்த நீதிமன்றம்

ADDED : செப் 22, 2024 05:21 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அலசநத்தம் தோட்டகிரி சாலையை சேர்ந்தவர் பர்கத், 30. ஆவலப்பள்ளி ஹட்கோ பழைய வசந்த் நகரை சேர்ந்தவர் சிவா, 27. இருவரும் கடந்தாண்டு டிச., மாதம், பார்வதி நகரில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக, 23 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் நவாஸ், ஆரிப், முபாரக் உட்பட, 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளியே வந்த நவாஸ், ஆரிப், முபாரக் ஆகிய, 3 பேரும் வேறு எந்த குற்றத்திலும் ஈடுபடக்கூடாது என தெரிந்திருந்தும், கடந்த ஜூலை, 10, இரட்டை கொலை வழக்கு சாட்சிக்கு, கொலை மிரட்டல் விடுத்தனர். அதற்காக, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த, ஓசூர் டவுன் போலீசார், அவர்களை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், இரட்டை கொலை வழக்கில் ஜாமினில் வெளியே இருந்த காலக்கட்டத்தில், வேறொரு குற்ற செயல்களில் ஈடுபட்டதால், இரட்டை கொலை வழக்கில் வழக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் முறையிட்டனர். இதை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சுமதி சாய்பிரியா, நேற்று முன்தினம் நவாஸ், ஆரிப், முபாரக் ஆகிய, 3 பேரின் ஜாமினை ரத்து செய்தார்.