/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'தி.மு.க., அரசு வாங்கிய கடனால் மக்கள் மீது அதிக வரிச்சுமை'
/
'தி.மு.க., அரசு வாங்கிய கடனால் மக்கள் மீது அதிக வரிச்சுமை'
'தி.மு.க., அரசு வாங்கிய கடனால் மக்கள் மீது அதிக வரிச்சுமை'
'தி.மு.க., அரசு வாங்கிய கடனால் மக்கள் மீது அதிக வரிச்சுமை'
ADDED : டிச 08, 2025 07:47 AM
ஓசூர்: ஓசூர், பாகலுார் ஹவுசிங் போர்டில் உள்ள மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மாற்று கட்சியினர் இணையும் விழா
நேற்று நடந்தது. வி.சி.க., தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் முனிராஜ் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில்
தங்களை இணைத்து கொண்-டனர்.
மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி, கட்-சியில் இணைந்தவர்களை சால்வை
அணிவித்து வரவேற்று பேசுகையில், ''தமிழகத்தில் கடந்த, 70 ஆண்டுகளில் வாங்கிய கடன், 5 லட்சம் கோடி ரூபாய்.
ஆனால் தற்போது, தி.மு.க., அரசு, நான்கரை ஆண்டுகளில், 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. கடன் சுமை
ஒவ்வொரு மக்களின் தலை மீதும் தான் விழும். இந்த கடனை தீர்க்க, மக்கள் மீது அதிக வரியை, தி.மு.க., அரசு விதித்து
வருகிறது,'' என்றார்.