/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழை நீரை சேமிக்க அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை; விவசாயிகள் குற்றச்சாட்டு
/
மழை நீரை சேமிக்க அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை; விவசாயிகள் குற்றச்சாட்டு
மழை நீரை சேமிக்க அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை; விவசாயிகள் குற்றச்சாட்டு
மழை நீரை சேமிக்க அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை; விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : ஆக 15, 2024 07:08 AM
கிருஷ்ணகிரி: தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமியின், 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கிருஷ்ணகிரியில் அவரது படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் நசீர் அகமது, செயலாளர் ராஜா, தலைவர் வேலு, மகளிர் அணித்தலைவி பெருமா உள்பட, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் நிருபர் களிடம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வழங்குகின்ற உற்பத்தி மானியங்களை பொருளாக வழங்காமல், பணமாகவே வழங்க வேண்டும். பருவம் தவறி மழை பெய்கின்றது. மழை நீரை தேக்கி வைக்க தமிழகத்தில் சரியான தடுப்பணைகள் இல்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 81 கி.மீ., தொலைவு ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கில், 6 தடுப்பணைகள் மட்டுமே உள்ளன. ஆனால், 12 தடுப்பணைகளுக்கு மேல் அமைக்க வேண்டும். வாணிஒட்டு திட்டம், அழியாளம் திட்டம், எண்ணெகொள் திட்டம், கடப்பாறை அணை கட்டும் திட்டம் மற்றும், 33 ஏரிகள் இணைப்பு திட்டம் போன்ற திட்டங்களை இதுவரை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. ஒட்டுமொத்தமாக தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதற்கு வழி வகுத்திருக்கிறார்களே தவிர, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும், தண்ணீரை தேக்கி வைக்க எந்த திட்டத்தையும், எந்த அரசும் செயல்படுத்தவில்லை. விவசாய விளை பொருட்களை ஏற்றுமதி செய்ய மறுத்து, இறக்குமதி செய்கின்றனர். இது திட்டமிட்டு விவசாயிகளை அழிக்கும் வஞ்சக செயலாக உள்ளது. எம்.எஸ்.சாமிநாதன் கொடுத்த அறிக்கையின்படி, உற்பத்தி செலவை கணக்கிட்டு, 50 சதவீத லாபத்துடன் விற்பனை செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.