ADDED : மே 05, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, காட்டேரி பஞ்., அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள மாரியம்மன் ஆலயம், மகா கணபதி, பாலசுப்பிரமணியர் மற்றும் கன்னிமார் சாமிகள் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
முளைப்பாரி மற்றும் பால் குடம் எடுத்து வந்து, மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் மாரியம்மன் தேர் ஊர்வலம் வந்தது. 9:30 மணிக்கு கோவில் கலசத்தின் மீது, புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சொக்கலிங்கம், ஊர் கவுண்டர் கணபதி உள்பட விழா குழுவினர் செய்திருந்தனர்.