/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் விட்டு விட்டு மழை குளிரின் தாக்கம் அதிகரிப்பு
/
ஓசூரில் விட்டு விட்டு மழை குளிரின் தாக்கம் அதிகரிப்பு
ஓசூரில் விட்டு விட்டு மழை குளிரின் தாக்கம் அதிகரிப்பு
ஓசூரில் விட்டு விட்டு மழை குளிரின் தாக்கம் அதிகரிப்பு
ADDED : நவ 19, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் கடந்த சில நாட்களாக, காலை நேரத்தில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இரவில் கடும் குளிர் நிலவுகிறது. இந்நிலையில், நேற்று காலை வெயிலின் தாக்கம் தென்படவில்லை. நீண்ட நேரத்திற்கு குளிர் நிலவியதால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் அவதியடைந்தனர்.
நேற்று மதியம், 3:30 மணிக்கு மேல், விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அதனால் பள்ளி சென்று திரும்பிய மாணவ, மாணவியர் குடைகளை பிடித்தபடி சென்றனர். இரவிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.