/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இன்று கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி துவக்கம்
/
பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இன்று கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி துவக்கம்
பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இன்று கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி துவக்கம்
பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இன்று கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி துவக்கம்
ADDED : செப் 13, 2024 07:05 AM
கிருஷ்ணகிரி: பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இன்று, கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி துவங்குகிறது.
கிருஷ்ணகிரியில், ஆண்டுதோறும் அகில இந்திய மாங்கனி ஜூன், ஜூலை மாதங்களில் நடப்பது வழக்கம். நடப்பாண்டில் மாங்கனி கண்காட்சி நடத்தும் இடத்தில் ஏற்பட்ட சிக்கலால் காலதாமதம் ஆனது. கடந்த மாத துவக்கத்தில் கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி மைதானத்தில், மாங்கனி கண்காட்சி நடத்த திட்டமிட்டு, ஆய்வு செய்த நிலையில் ஆக., 2வது வாரம் மாங்கனி கண்காட்சி நடத்தப்படும் என அறிவித்தனர். ஆனால் டெண்டர்கள் எடுப்பதில் காலதாமதம் ஆன நிலையில், கடந்த மாதமும் மாங்கனி கண்காட்சி நடத்தப்படவில்லை.
இன்று, 13ம் தேதி கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி நடத்தப்படும் என அறிவித்த நிலையில், மைதானத்தில் விழா பணிகள் முழுமையாக முடியாமல் இருந்தது. நேற்று, தி.மு.க., மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., இப்பணிகளை ஆய்வு செய்தபோது, அதிருப்தியை தெரிவித்து, அதிகாரிகளை கடிந்து கொண்டார். பணிகள் முடிவடையாமல், மாங்கனி கண்காட்சியை துவக்காதீர்கள் எனக்கூறி சென்றார். இதனால், இன்று துவங்கவிருந்த மாங்கனி கண்காட்சி நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும், அவசர அவசரமாக பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள், திட்டமிட்டபடி இன்று மதியம், 3:00 மணிக்கு மாங்கனி கண்காட்சி துவங்கும் எனக்கூறினர்.
கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரியில், இன்று துவங்க உள்ள, 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை, தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி திறந்து வைக்க உள்ளார். முன்னதாக மதியம், 2:45 மணிக்கு, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில், புதிய வழித்தடங்களில் அரசு பஸ்களை, அமைச்சர் இயக்கி வைக்கிறார். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.