ADDED : அக் 25, 2026 02:18 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: தாராபுரம் இடைத்தேர்தலில், தமிழக முதல்வர் விஜய் பிரசாரம் செய்த போது சாலை மறியல் செய்ததாகவும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் பிற கட்சி பேனர்களை அனுமதியின்றி அகற்றுவதில் போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், நா.த.க., நிர்வாகியும், தாராபுரம் தொகுதி வேட்பாளருமான கார்த்திகா மற்றும் அவரது கணவர் முருக சந்திரகுமார் மற்றும் கட்சியினர் உள்பட, 12 பேரை கடந்த, 20ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
இதை கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
