/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
செவிலியர் மாயம் போலீசில் புகார்
/
செவிலியர் மாயம் போலீசில் புகார்
ADDED : அக் 05, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செவிலியர் மாயம்
போலீசில் புகார்
ஊத்தங்கரை, அக். 5-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கதவணியை சேர்ந்தவர் மாது. இவரது மகள் சந்தியா, 19, டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு, திருப்பத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார்.
கடந்த, 1ம் தேதி காலை வேலைக்கு செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. திருப்பத்தூர் அருகே உள்ள பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த மதன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக, ஊத்தங்கரை போலீசில் சந்தியாவின் தாயார் உமாராணி கொடுத்த புகார்படி, ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.