/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
6வது நாளாக பணியை புறக்கணித்து வருவாய்த்துறையினர் போராட்டம்
/
6வது நாளாக பணியை புறக்கணித்து வருவாய்த்துறையினர் போராட்டம்
6வது நாளாக பணியை புறக்கணித்து வருவாய்த்துறையினர் போராட்டம்
6வது நாளாக பணியை புறக்கணித்து வருவாய்த்துறையினர் போராட்டம்
ADDED : மார் 01, 2024 02:16 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், 10 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, 6வது நாளாக நேற்று பணிக்கு செல்லாமல்
போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.
இதில்,
துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட
பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை
உடனே வெளியிட வேண்டும். இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற
அரசாணை அடிப்படையில் விதித்திருந்த ஆணையை உடனே வெளியிட வேண்டும்.
வருவாய்
மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை
கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட
ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாநகராட்சி,
நகராட்சி ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் உள்பட பலர்
பங்கேற்றனர். வருவாய்த்துறை அலுவலர்கள், 6 நாட்களாக பணிக்கு
வராததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

