/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
/
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
ADDED : பிப் 23, 2024 04:23 AM
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட துணைத்தலைவர் ஜெயபிரபா, பட்டு வளர்ச்சித்துறை வட்டத்தலைவர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு, வட்டக்கிளை தலைவர் குமரேசன் தலைமையில், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்ட பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும்.
இளநிலை, முதுநிலை ஆர்.ஐ., பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையை உடனே வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதனால், தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலகங்களில் அலுவலர்கள் இல்லாததால், பொதுமக்கள் பலர், பல்வேறு பணிகளுக்காக வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
* ஊத்தங்கரை தாசில் தார் அலுவலகத்திலும், வருவாய்த்துறையினர் போராட்டம் நடத்தினர்.