/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தீபாவளி கொண்டாட ஊருக்கு சென்ற மக்களால் 3 நாட்களாக வெறிச்சோடிய ஓசூர் சாலைகள்
/
தீபாவளி கொண்டாட ஊருக்கு சென்ற மக்களால் 3 நாட்களாக வெறிச்சோடிய ஓசூர் சாலைகள்
தீபாவளி கொண்டாட ஊருக்கு சென்ற மக்களால் 3 நாட்களாக வெறிச்சோடிய ஓசூர் சாலைகள்
தீபாவளி கொண்டாட ஊருக்கு சென்ற மக்களால் 3 நாட்களாக வெறிச்சோடிய ஓசூர் சாலைகள்
ADDED : நவ 04, 2024 05:57 AM
ஓசூர்: ஓசூர், தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக உள்ளது. இங்கு, சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி, நாகர்-கோவில், மதுரை உட்பட பல்வேறு மாவட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். தொழிற்சாலைகள் புதிது, புதி-தாக துவங்கப்பட்டு வருவதால், ஓசூர் நகரத்தின் வளர்ச்சி அதி-வேகமாக உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு, புது துணி, காய்கறி, பழம், பேன்சி பொருட்கள் வாங்க கடந்த, 29, 30 மற்றும் தீபா-வளி நாளில் மக்கள் திரண்டதால், ஓசூர் தாலுகா அலுவலக சாலை, பாகலுார் சாலை, பழைய பெங்களூரு சாலை, ராயக்-கோட்டை சாலை, தேன்கனிக்கோட்டை சாலை உட்பட நகரின் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நிறைந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர். தீபாவளி பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் பலர் தங்க-ளது சொந்த ஊருக்கு சென்றதால், தீபாவளி பண்டிகை நாளில் மதியத்திற்கு பின், நகரின் சாலைகள் வெறிச்சோட துவங்கின. நேற்று வரை மூன்று நாட்களாக, நகரிலுள்ள முக்கிய சாலைகளில் குறைந்த அளவில்தான் வாகனங்கள் சென்று வந்தன. அதிகளவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடந்த, 20 ஆண்டுக்கு முன்பி-ருந்த ஓசூரை பார்ப்பது போல் இருந்தது.
இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற-வர்கள் திரும்பி வரத்துவங்கியதால், நேற்று மாலை முதல், கிருஷ்-ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்கு-வரத்து அதிகரிக்க துவங்கியது.