/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா
/
நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா
நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா
நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா
ADDED : மார் 31, 2025 01:58 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில், பாரதியார் தெருக்கூத்து, நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் நல சங்கம் சார்பில் நேற்று முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். பொருளாளர் சக்தி வரவேற்றார். ஆர்.ஐ., புஷ்பலதா விழாவை துவக்கி வைத்தார். தெருக்கூத்து பயிற்சி சங்க மாநிலத்தலைவர் லட்சுமணன் பேசினார்.
முன்னதாக, பம்பை, தெருக்கூத்து, பேன்ட் செட், கோலாட்டம், சிலம்பாட்ட கலைஞர்கள் முக்கிய வீதிகள் வழியாக, ஆடல், பாடலுடன் பேரணியாக சென்றனர். மூத்த கலைஞர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. எழுத்தாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில், நாட்டுப்புற கலைஞர்களின் ஓய்வூதியம், 5,000 ரூபா-யாக உயர்த்த வேண்டும். பள்ளிகளில் நாட்டுப்புற கலைகளை கற்-பிக்க, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு, இசை, நாடகம், கூத்து உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை கற்பிக்க, அரசு தாராள நிதியை ஒதுக்க வேண்டும். சென்னை சங்கமம் போன்று, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், அரசு சார்பில் கலை திருவி-ழாக்கள் நடத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தை மாதத்தை தமிழர் பண்பாட்டு மாதம் என, தமிழ்நாடு அரசு அறி-வித்து அரசாணை வெளியிட வேண்டும். நலிவுற்ற கலைஞர்க-ளுக்கு,
3 சென்ட் நிலம் வழங்கி, வீடு கட்டிக் கொடுத்து, பட்டா வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட
பல்வேறு தீர்மானங்கள் நிறை
வேற்றப்பட்டன.