ADDED : மார் 14, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பூர்ணா காந்தரதாஸ், 19; கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே ஜிகினியில் தங்கி, கூலிவேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களாக, ஓசூர் அருகே நாகொண்டப்பள்ளியிலுள்ள தனியார் நிறுவனத்தில் இரும்பு சீட் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த, 11ல் மாலை, 4:00 மணிக்கு, பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேலேயிருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

