/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முனீஸ்வரன் கோவிலில் உண்டியல் காணிக்கை திருட்டு
/
முனீஸ்வரன் கோவிலில் உண்டியல் காணிக்கை திருட்டு
ADDED : ஆக 05, 2025 01:23 AM
சூளகிரி, சூளகிரியிலுள்ள பேரிகை சாலையில், ரனமந்தகுட்டை முனீஸ்வரன் கோவில் உள்ளது. நாராயணப்பா, 60, என்பவர் பூசாரியாக உள்ளார். பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடப்பதால், சூளகிரி சுற்றுப்புற கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்ய செல்வது வழக்கம். இருசக்கர மற்றும் சரக்கு வாகனங்களுக்கு பக்தர்கள் பூஜை செய்து செல்கின்றனர்.
கோவில் வெளிப்பிரகாரத்தில், பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பூசாரி நாராயணப்பா கோவில் நடையை சாத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். இரவு, 10:00 மணிக்கு மேல் கோவிலுக்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கையை திருடி சென்றனர். சூளகிரி போலீசார் அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.