/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநில விளையாட்டு விருது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
/
மாநில விளையாட்டு விருது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
மாநில விளையாட்டு விருது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
மாநில விளையாட்டு விருது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 26, 2025 12:53 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும், பதக்கங்களை பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது, பரிசாக தலா, 1 லட்சம் ரூபாய், 10,000 ரூபாய் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கி வருகிறது.
இத்திட்டத்தின் படி, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள், தலை சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுனர்கள், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர், விளையாட்டு போட்டிகளை நடத்தும் நடத்துனர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்
படுகிறது.
இதை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்திற்கு ஆக., 11க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.