ADDED : செப் 28, 2026 01:42 AM
பாகலுார்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே ஸ்ரீவாரி லேஅவுட்டை சேர்ந்தவர் பாபு, 49. பாகலுார் அருகே ஈச்சங்கூர் பகுதியில், டி.கே., பிரசன்னா என்ற பெயரில், கிரஷர் நடத்தி வந்தார். கடந்த, 6 மாதமாக கிரஷர் இயங்கவில்லை.
கடந்த, 25ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, மர்ம நபர்கள் சிலர், கிரஷர் வளாகத்திற்குள் நுழைந்து, 9,000 ரூபாய் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடினர். இதை பார்த்த உரிமையாளர் பாபு தட்டி கேட்டதால், அவரை கத்தி முனையில் மிரட்டி, அவரி-டமிருந்த, 5,000 ரூபாயையும் பறித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
பாபு புகார் படி, பாகலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்-தனர். இதில், பாகலுார் அருகே சத்தியமங்கலத்தை சேர்ந்த யஸ்வந்த், 28, பெலத்துார் ராஜிவ்காந்தி நகரில் வசிக்கும், கர்நா-டகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த ககன்குமார், 23, பாகலுார் அருகே சொக்கரசனப்பள்ளியில் வசிக்கும், தேன்கனிக்கோட்டை அருகே சின்ன அத்திக்கோட்டையை சேர்ந்த பிரசாந்த்குமார், 24, ஆகியோர், வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்த பாகலுார் போலீசார், இரும்பு பொருட்கள் மற்றும் 5,000 ரூபாயை பறிமுதல் செய்-தனர்.
