ADDED : பிப் 17, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, சென்னப்ப நாயக்கனுாரில் த.வா.க., ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் திருப்-பதி தலைமை வகித்தார்.
ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்-பாளர் நெப்போலியன் கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். கூட்-டத்தில், அனைத்து கிராமங்களிலும் கட்சிக் கிளைகள் அமைக்க வேண்டும். அனைத்து பஞ்சாயத்திலும் வாரம் ஒரு முறை திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். ஊத்தங்கரையில் கஞ்சா போதை பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதை கட்டுப்படுத்த தவறிய நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்-பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஊத்தங்கரை தொகுதி பொறுப்-பாளர் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.