/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துாத்துக்குடிக்கு கடத்த முயன்ற புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்
/
துாத்துக்குடிக்கு கடத்த முயன்ற புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்
துாத்துக்குடிக்கு கடத்த முயன்ற புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்
துாத்துக்குடிக்கு கடத்த முயன்ற புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்
ADDED : ஆக 30, 2025 01:10 AM
ஓசூர், ஓசூர் வழியாக துாத்துக்குடிக்கு கடத்த முயன்ற, 86 கிலோ புகையிலை பொருட்கள், கர்நாடகா மாநில மதுபானங்களை, காருடன் போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
ஓசூர், சிப்காட் போலீசார், ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த போர்டு காரை நிறுத்தி சோதனையிட்டதில், 86 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு, 68,700 ரூபாய் ஆகும். அதே போல 36 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு, 2,880 ரூபாய்.
விசாரணையில் பெங்களூருவில் இருந்து புகையிலைபொருட்கள், கர்நாடகா மது வகைகளை வாங்கி துாத்து
குடிக்கு சென்று விற்பதற்காக கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து காரில் இருந்த துாத்துக்குடி மாவட்டம், கருக்கல்குளத்தை சேர்ந்த மணிகண்டன், 29, குருசாமி,23, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.