/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.23 லட்சத்தில் 'டீல்' நிறுவனம் மூலம் அரசு பள்ளிக்கு கழிவறை, சுற்றுச்சுவர்

ADDED : நவ 03, 2025 03:04 AM
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், மேட அக்ர-ஹாரம் பஞ்., உட்பட்ட கடவரஹள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்-கப்பள்ளியில், 95 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். போதிய கழிவறை மற்றும் சுற்றுச்சுவர் இல்லாமல், மாணவ, மாணவியர் அவதியடைந்தனர்.
பள்ளி தலைமையாசிரியை செல்வராஜம் வேண்டுகோளை ஏற்று, டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் 'டீல்' நிறு-வனம், சமூக பொறுப்பு நிதியிலிருந்து, 23 லட்சம் ரூபாய் ஒதுக்கி, கழிவறை மற்றும் சுற்றுச்சுவரை கட்டியுள்ளது.'டீல்' நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட தலைவர் பாஸ்கர், கழிவறையை மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்கு ஒப்ப-டைத்தார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்-பட்டன. பள்ளி தலைமையாசிரியை செல்வராஜம், 'டீல்' நிறுவன அசோசியேட் குரூப் மேலாளர் சிவராஜா சேகர், மூத்த மேலா-ளர்கள் மாணிக்கம், ஹரிஹரன், மேலாளர்கள் தணிகைவேல், ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, 'டீல்' நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி பிரபு, பள்ளி ஆசி-ரியர் வீரபத்திரன் செய்திருந்தனர். ஆசிரியை அருள் கமலா நன்றி கூறினார்.