/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மணல், கற்கள் கடத்தல்டிராக்டர், 3 லாரிகள் பறிமுதல்
/
மணல், கற்கள் கடத்தல்டிராக்டர், 3 லாரிகள் பறிமுதல்
ADDED : மே 02, 2025 01:16 AM
கிருஷ்ணகிரிகீழ்குப்பம் வி.ஏ.ஓ., ராஜேஷ் மற்றும் அலுவலர்கள் ஊத்தங்கரை அடுத்த கீழ்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை சோதனையிட்டதில், ஒரு யூனிட் ஜல்லி கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து ராஜேஷ் புகார் படி, ஊத்தங்கரை போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
ஊத்தங்கரை வி.ஏ.ஓ., தினேஷ்குமார் தலைமையிலான அலுவலர்கள் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற ஒரு டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. தினேஷ்குமார் புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஓசூர் அருகே புக்கசாகரம் வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள், கதிரேப்பள்ளி - அத்திமுகம் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியில், 6 யூனிட் கற்கள் அனுமதி சீட்டின்றி கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து, ஹட்கோ போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறை உதவி புவியியலாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள், தட்சிண திருப்பதி கோவில் ஆர்ச் அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்த போது, 5 யூனிட் மண் கடத்தியது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.