/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதிய மேம்பாலம் பணிகள் துவங்க திட்டம் மீண்டும் வருகிறது போக்குவரத்து நெரிசல்
/
புதிய மேம்பாலம் பணிகள் துவங்க திட்டம் மீண்டும் வருகிறது போக்குவரத்து நெரிசல்
புதிய மேம்பாலம் பணிகள் துவங்க திட்டம் மீண்டும் வருகிறது போக்குவரத்து நெரிசல்
புதிய மேம்பாலம் பணிகள் துவங்க திட்டம் மீண்டும் வருகிறது போக்குவரத்து நெரிசல்
ADDED : ஆக 23, 2025 01:20 AM
ஓசூர், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், புதிய மேம்பால பணிகள் துவங்க உள்ளதால், மீண்டும் போக்குவரத்து நெரிசலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம், ஓசூர் பத்தலப்பள்ளி அருகே புதிய பஸ் ஸ்டாண்ட்
கட்டப்பட்டு வருகிறது. இங்கு பஸ்கள் வந்து செல்லும் போது, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால், அதை தவிர்ப்பதற்காக இப்பகுதியில், 37.93 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே சிப்காட் ஜங்ஷன், கோபசந்திரம், சுண்டகிரி பகுதியில் மேம்பால பணிகள் முடியாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
இதுமட்டுமின்றி, பேரண்டப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே, சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு மேம்பாலங்கள் அமைக்கப்படு வதால் போக்குவரத்து பாதிக்கப்
படுகிறது. ஓசூர் பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில், மேம்பாலம் பழுது
காரணமாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், பத்தலப்பள்ளியில் புதிய பஸ் ஸ்டாண்ட் முன் மேம்பாலம் கட்டும் பணி அடுத்த மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பத்தலப்பள்ளி யில் காய்கறி மார்க்கெட், சிப்காட், 2 மற்றும் கல்வி நிறுவனங்கள்
உள்ளன. இப்பகுதியில் தினமும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேம்பால பணி துவங்கினால் அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்படும். எனவே, இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மேலும்
அதிகரிக்கும்.
இப்பகுதியில், சரியான திட்டமிடலுடன் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுத்த பின், பாலம் பணிகளை துவங்க வேண்டும்.
இல்லாவிட்டால், மேலும் ஓராண்டிற்கு போக்குவரத்து நெரிசலால்
சிரமப்பட வேண்டிய சூழல் ஏற்படும்.