/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்: ரூ.50 லட்சம் கடனால் தனியார் ஊழியர் தற்கொலை
/
ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்: ரூ.50 லட்சம் கடனால் தனியார் ஊழியர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்: ரூ.50 லட்சம் கடனால் தனியார் ஊழியர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்: ரூ.50 லட்சம் கடனால் தனியார் ஊழியர் தற்கொலை
ADDED : மே 23, 2024 07:11 AM
ஓசூர் : ஓசூரில், ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர், 50 லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டதால், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த ஜெயகொண்டம் அருகே குவாகம் பகுதியை சேர்ந்தவர் மணிவாசகன், 36; இவர் மனைவி அருணா, 30. இவர்களுக்கு மூன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. மணிவாசகன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அலசநத்தம் தோட்டகிரி சாலையில், வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 19ல் சொந்த ஊருக்கு, குழந்தையுடன் அருணா சென்றார். வீட்டில் தனியாக இருந்த மணிவாசகன், கடந்த, 2 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. நேற்று காலை மனைவி அருணா போன் செய்தபோது, மணிவாசகன் போனை எடுக்கவில்லை. அதனால் அருகில் வசிப்போர்களிடம் வீட்டிற்கு சென்று பார்க்க கூறினார். அவர்கள் சென்று பார்த்தபோது, மணிவாசகன் மின்விசிறியில் துாக்கிட்டு இறந்து கிடந்தார்.
ஹட்கோ இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது, மனைவி அருணா, பெற்றோர், சகோதரர் ஆகியோருக்கு, மணிவாசகன் தன் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அதில், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தில் பணம் இழந்தது, 50 லட்சம் ரூபாய் வரை மொபைல் ஆப்களில் கடன் வாங்கியது, அதை திரும்ப செலுத்த முடியாது, அதிலிருந்து மீண்டு வர முடியாது என்பதால், தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

