ADDED : மார் 02, 2025 07:00 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் கிராமத்தில், வேளாண்துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை இணைந்து, இயற்கை வேளாண்மை குறித்தும், அட்மா திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்தும், ஒருநாள் பயிற்சி நடந்தது.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை வகித்து, பருவ நிலை மாற்றத்தினால் ஏற்படும் பயிர் சேத பாதிப்பு, அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்கினார்.
பையூர் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலைய இணை பேரா-சிரியர் கிருஷ்ணவேணி, இயற்கை வேளாண்மையில் ஒருங்கி-ணைந்த பூச்சி, நோய் மேலாண்மை முறைகள், அதன் வழிமு-றைகள், பூச்சி விரட்டி தயாரிப்பு செயல்விளக்கம் மூலம் செய்து காண்பித்தார். வேளாண் அறிவியல் மைய விரிவாக்கத்துறை தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார், இயற்கை வேளாண்-மையில் பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், தேமோர் கரைசல், மீன் அமிலம் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தார். வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கலா, உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் சுருதி, வட்டார வேளாண் அலுவலர்கள் பிரியா, எலிசபெத் உள்பட பலர் பங்கேற்றனர்.