/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண் தொழில் முனைவோரை உருவாக்க பயிற்சி
/
பெண் தொழில் முனைவோரை உருவாக்க பயிற்சி
ADDED : அக் 31, 2025 12:37 AM
கிருஷ்ணகிரி, பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், 3 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், வங்கிக்கடன் பெறுவது எப்படி, தொழில் தொடங்கும் முறைகள், ஆன்லைன் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வது போன்ற முக்கிய தலைப்புகளில் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம், மாவட்ட தொழில் மையம், கோவையை சேர்ந்த நுகர்வோர், குழந்தைகள் உரிமை மற்றும் பெண்கள் வளர்ச்சி பாதுகாப்பு மையம் சார்பில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரி வளாகத்தில், தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி, 3 நாட்கள் நடந்தது. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபாரதி, தொண்டு நிறுவன இயக்குனர் சத்தியபிரியா மற்றும் பயிற்றுனர் முரளி ஆகியோர், 35 பெண்களுக்கு, மூலிகை சோப்பு, ஷாம்பு, மற்றும் மூலிகையினால் ஆன பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தனர். 3 நாள் பயிற்சி முடித்தவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் கீதா, சான்றிதழ்களை வழங்கி
பாராட்டினார்.

