/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பதற்றமான 209 ஓட்டுச்சாவடிகள்; 1,228 கேமரா மூலம் கண்காணிப்பு
/
பதற்றமான 209 ஓட்டுச்சாவடிகள்; 1,228 கேமரா மூலம் கண்காணிப்பு
பதற்றமான 209 ஓட்டுச்சாவடிகள்; 1,228 கேமரா மூலம் கண்காணிப்பு
பதற்றமான 209 ஓட்டுச்சாவடிகள்; 1,228 கேமரா மூலம் கண்காணிப்பு
ADDED : ஏப் 19, 2024 06:51 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியிலுள்ள பதற்றமான ஓட்டுச்சாவடிகள், கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சரயு தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தல் இன்று (19ம் தேதி) நடக்கிறது. கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியிலுள்ள, 1,888 ஓட்டுச்சாவடிகளில், ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில், 36, பர்கூர், 34, கிருஷ்ணகிரி, 55, வேப்பனஹள்ளி, 15, ஓசூரில், 55 என மொத்தம், 208 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 114 நுண்பார்வையாளர்கள் மற்றும், 1,228 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்'' என்றார்.