/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் அருகே கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மாணவனை கொல்ல முயன்ற இருவர் கைது

ADDED : டிச 11, 2025 05:13 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர், 16 வயது சிறுவன். இவர், அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியை காதலித்து, சமீபத்தில் வீட்டிலிருந்து அழைத்து சென்றார். ஓசூர் மகளிர் போலீசார் சிறுவனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
ஜாமினில் வந்த சிறுவன், சிறுமியுடன் தொடர்ந்து மொபைல்போனில் பேசி வந்துள்ளார்.
இதனால், சிறுவனை, சில நாட்களுக்கு முன், சிறுமியின் உறவினரான செல்லதுரை, 56, தரப்பினர் அடித்துள்ளனர்.
இதையறிந்த சிறுவனின், 13 வயது தம்பியான, அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன், டிச., 8ம் தேதி, செல்லதுரை நடத்தி வரும் ஸ்வீட்ஸ் கடைக்கு சென்று, தன் அண்ணனை எவ்வாறு அடிக்கலாம் என கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த செல்லதுரை தரப்பினர், கொதிக்கும் எண்ணெயை மாணவன் மீது ஊற்றினர்.
இதில், இடது கையில் காயமடைந்த மாணவன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
மாணவனின் தாய் புகாரின்படி, செல்லதுரை உட்பட இருவரை ஓசூர் டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.