/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது
/
ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது
ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது
ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : மே 01, 2024 01:50 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப் அருகே சேலம் - கிருஷ்ணகிரி சாலையில், கடந்த ஏப்., 9ல், கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டனர்.
அவ்வழியே வந்த ஈச்சர் லாரியை சோதனையிட்டதில், 50 கிலோ அளவுள்ள, 452 மூட்டைகளில், 22,600 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றதும், அந்த லாரியின் பின்னால் போர்டு காரில் சிலர் வழிக்காவலுக்கு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ராமச்சந்திரன், 48, காரிமங்கலம் சேட்டு, 28, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுதாகர், கர்நாடக மாநிலம், பங்காருபேட்டை, நாகராஜ், 58 ஆகியோரையும், லாரியில் இருந்த சேலம் மாவட்டம், ஓமலுாரை சேர்ந்த ராமச்சந்திரன், 29 உள்ளிட்ட, 5 பேரையும் போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஜோசி நிர்மல்குமார் பரிந்துரை படி விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ராமச்சந்திரன், 48, சேலம் மாவட்டம், ஓமலுாரை சேர்ந்த ராமச்சந்திரன், 29 ஆகிய இருவரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார்.