/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரு வணிகர்கள் மூழ்கி பலி
/
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரு வணிகர்கள் மூழ்கி பலி
ADDED : மே 06, 2025 07:41 AM

ஒகேனக்கல்: வணிகர் தினத்தையொட்டி, ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த வணிகர்களில் இருவர் காவிரியாற்றில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த வணிகர் சங்கத்தினர், 21 பேர் நேற்று வேன் ஒன்றில் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்தனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள், மதியம், 1:00 மணியளவில், தடை செய்யப்பட்ட ராணிப்பேட்டை, காவிரியாற்று பகுதியில் குளித்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக நகை அடகுக்கடை உரிமையாளர் தனசேகர், 46, அச்சக உரிமையாளர் ரவி, 53, ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
தகவலறிந்த ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் இளைஞர்கள் உதவியோடு, ஒரு மணி நேர தேடுதலுக்குப் பின் இருவரையும் சடலமாக மீட்டனர். ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.